வாஜ்பாய்க்கு இன்று 93வது பிறந்த நாள்

வாஜ்பாய்க்கு இன்று 93வது பிறந்த நாள்

வாஜ்பாய்க்கு இன்று 93வது பிறந்த நாள்
Published on

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 93வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத 5 ஆண்டு ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்த முதல் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரார் வாஜ்பாய். இரண்டு முறை பிரதமராக அரியணை ஏறிய அவரால் முழுமையாக 5 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்யவில்லை. நாட்டின் பிரதமராக 1996 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக பதவியேற்ற போது அவரது பதவி காலம் வெறும் 13 நாட்களே நீடித்தது. மீண்டும் 1998-ல் பிரதமரான போது அவரது பதவிக்காலம் 13 மாதங்கள் மட்டுமே நீடித்தது. தோல்விகளில் இருந்து பாடம் கற்ற வாய்பாய் 1999 ஆம் ஆண்டு பல்வேறு அரசியல் கட்சிகளை இணைத்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார். இந்த முறை முழுமையாக  5 ஆண்டுகாலத்தை பூர்த்தி செய்தார்.

பல்வேறு அரசியல் தலைவர்களுடன் வாஜ்பாய் நட்பு பாராட்டினார். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றவர், அடல் பிகாரி வாஜ்பாய். அவரது ஆட்சி காலத்தில்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள வாஜ்பாஜ் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com