குதிரைவால் போட்டதற்காக மாணவியை கடுமையாக தாக்கிய ஆசிரியை..!

குதிரைவால் போட்டதற்காக மாணவியை கடுமையாக தாக்கிய ஆசிரியை..!

குதிரைவால் போட்டதற்காக மாணவியை கடுமையாக தாக்கிய ஆசிரியை..!
Published on

பள்ளி மாணவி தனது ஜடையை பின்னால் குதிரைவால் போட்டதற்காக ஆசிரியர் ஒருவர் மாணவியை கடுமையாக தாக்கிய சம்பவம் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது.

ஹைதராபாத் அருகே உள்ள ஹிமாயத்நகரில், தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் 9 வயது சிறுமி அமுதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பள்ளியின் விதிமுறைப்படி தனது ஜடையை பின்னால் குதிரைவால் போட்டு பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளியின் விதிமுறையை மீறியதாக ஆசிரியை ஒருவர் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மாணவியின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியை பள்ளியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் நந்தினி கூறும்போது, “ குதிரைவால் போட்டதற்காக அமுதாவை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அவரின் கழுத்தை பிடித்து வகுப்பறைக்கு வெளியிலும் தள்ளியுள்ளனர். இதனால் அமுதாவின் கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை கண்களில் அடிபட்டிருந்தால் என்ன செய்திருப்பார்கள்..? பள்ளியால் அந்த இழப்பீட்டை சரிசெய்து விடமுடியுமா..? அதுமட்டுமில்லாமல் ஆசிரியரை பற்றி உங்கள் வீட்டில் புகார் சொல்வாயா..? என கேட்டதோடு முடிந்தால் வீட்டுக்கு சென்று உங்கள் பெற்றோரிடம் இதுபற்றி சொல்” என அந்த ஆசிரியை ஏளனமாக பேசியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பேசிய நந்தினி, “ இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மூன்றவாது முறை. ஏற்கனவே இரண்டு முறை அற்ப காரணத்திற்காக குழந்தையை தாக்கினார்கள். அப்போது பள்ளிக்கு சென்று முறையிட்டோம். ஆசிரியர் புதிதாக பணிக்கு வந்தவர்கள் என்பதால் இப்படி நடந்துவிட்டது. இனி நடக்காது என்றார்கள். ஆனால் திரும்ப திரும்ப அவ்வாறே நடக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், மாணவர்கள் தாக்கப்படுவது குறித்து உண்மையிலேயே பள்ளி நிர்வாகத்திற்கு அக்கறை இல்லை. நாங்களே எங்கள் குழந்தைகளை அடிப்பதில்லை. ஒருவேளை குழந்தை விதிகளை பின்பற்றவில்லை என்றால் அதனை எங்களிடம் தெரிவிக்கலாம். அல்லது பள்ளி டைரியில் எழுதி அனுப்பலாம். அப்படி இல்லாமல் எப்படி குழந்தையை தாக்க முடியும்” என கேள்வி எழுப்பினார்.

சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளி நிர்வாகம், குதிரைவால் போட்டதற்காக மாணவி தண்டிக்கப்படவில்லை என்றும் வீட்டுப் பாடம் செய்யாததற்கு தான் தண்டனை கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Courtesy: TheNewsMinute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com