\
9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: சாக்குப் பையில் மறைக்கப்பட்ட உடல் !

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: சாக்குப் பையில் மறைக்கப்பட்ட உடல் !

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: சாக்குப் பையில் மறைக்கப்பட்ட உடல் !
Published on

பீகார் மாநிலத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரன், உடலை சாக்குப்பையில் மறைத்து வைத்தது போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் பக்ராவூர் கிராமத்தில் 9 வயதுச் சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் சிறுமியை தேட தொடங்கியுள்ளனர். பின்பு சிறுமியின் வீட்டில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஜெய்கிஷோர் ஷா என்பவர் வீடு வெளியே பூட்டப்பட்டு இருந்துள்ளது. அவரது வீட்டின் வாசலில் ரத்தக்கரை இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து ஜெய்கிஷோர் ஷா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸார் அங்கு சாக்குப்பையில் சிறுமியின் உடல் இறந்த நிலையில் இருந்ததை கண்டுள்ளனர். இதனையடுத்து பிரேதத்தை கைப்பற்றிய போலீஸார் மருத்துவமனைக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து ஜெய்கிஷோர் ஷா மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com