“மின்னல் வேகத்தில் வந்த கார் ; 20 அடி வரை தூக்கி வீசப்பட்ட மக்கள்”-சாலை விபத்தில் 9 பேர் பலி!

குஜராத் அகமதாபாத்தில் 2 கார்கள் மோதிய விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
Ahmedabad ISKCON flyover Accident
Ahmedabad ISKCON flyover AccidentTwitter

அகமதாபாத் சர்கேஜ்-காந்திநகர் (எஸ்ஜி) நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு அருகிலுள்ள மேம்பாலத்தில் அதிகாலை 1.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இஸ்கான் மேம்பாலத்தில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில், எஸ்யூவி கார் மற்றும் லாரி மோதிக்கொண்டதில் சிக்கியவர்களை மீட்பதற்காக மக்கள் கூடியிருந்துள்ளனர். அப்போது அதே ரோட்டில் ராஜ்பாத் கிளப் பகுதியில் இருந்து அதிவேகத்தில் வந்த ஜாகுவார் சொகுசு கார் ஒன்று அங்கிருந்த வண்டிகள் மீது மோதியது மட்டுமில்லாமல், கூடியிருந்த மக்கள் மீதும் அதிவேகத்தில் மோதியதாக கூறப்படுகிறது. சுமார் 160 கிமீ வேகத்தில் வந்ததாக கூறப்படும் ஜாகுவார் கார் மோதியதில், மக்கள் 20-25 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

நள்ளிரவு 1 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் தற்போது 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 13 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிகிறது. காயமடைந்தவர்களில் கார் டிரைவர் சத்யா படேலும் அடங்குவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இஸ்கான் கோவில் அருகே உள்ள மேம்பாலம் தற்காலிகமாக போலீசாரால் மூடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com