\
ஆந்திராவில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 9 பேர் மரணம்

ஆந்திராவில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 9 பேர் மரணம்

ஆந்திராவில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 9 பேர் மரணம்
Published on: 

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏலூர் அருகே ஆற்றுப்பாலத்தை கடந்தபோது பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதியிலுள்ளவர்கள் படகுகள் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பேருந்தில் கிட்டத்தட்ட 26 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. மீட்கப்பட்டவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மீட்புப்படையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும், மாநில பேரிடர் மீட்புப்படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com