இந்தியா
உச்சநீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் தற்போது 10 நீதிபதி பதவியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், கொலிஜியம் முறையில் பரிந்துரைக்கப்பட்ட 9 நீதிபதிகள் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார். அதன்படி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஸ்ரீநிவாஸ், குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி. ரவிகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பெலா எம்.திரிவேதி ஆகியோர் பெண்கள் ஆவர். புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர்.