\
நிச்சயதார்த்தத்திற்கு சென்று திரும்பியபோது சாலைவிபத்து - 9 பேர் பலி.. கர்நாடகாவில் சோகம்!

நிச்சயதார்த்தத்திற்கு சென்று திரும்பியபோது சாலைவிபத்து - 9 பேர் பலி.. கர்நாடகாவில் சோகம்!

நிச்சயதார்த்தத்திற்கு சென்று திரும்பியபோது சாலைவிபத்து - 9 பேர் பலி.. கர்நாடகாவில் சோகம்!
Published on: 

கர்நாடகா மாநிலம் தார்வாட்டில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெனகனஹள்ளியைச் சேர்ந்த 21 பேர் மனசுரா கிராமத்தில் நடைபெற்ற திருமண நிச்சயத்திற்கு சென்று திரும்பும் போது இந்த கோர விபத்து நிகழ்ந்தது. நள்ளிரவு 1.30 - 2.30 மணியளவில் படா என்ற இடத்தின் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதியது. அதில் நிகழ்விடத்திலேயே 7 பேரும், மருத்துவமனையில் இருவரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மூன்று பேர் ஹூபலியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட கண்காணிப்பாளர் ஓபி போலீஸ் கிருஷ்ணகாந்த் சம்பவ இடத்திற்கு உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டார். இந்த விபத்தில் அனன்யா(14), மகேஷ்வரா(11), ஷில்பா(34), நீலவ்வா(60), மதுஸ்ரீ(20) மற்றும் ஷம்புலிங்கையா(35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com