இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி
Published on

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 879 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,70,179லிருந்து 1,71,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,21,56,529லிருந்து 1,22,53,697 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 97,168 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,64,698 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 1,61,736 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று 1.68 லட்சமாக இருந்த இருந்த கொரோனா பாதிப்பு இன்று 1.61 லட்சம் என சற்று குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,35,27,717 ஆக இருந்த நிலையில் தற்போது 1,36,89,453 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 879 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,70,179லிருந்து 1,71,058 ஆக அதிகரித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com