கொரோனா: கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 83 பேர் உயிரிழப்பு

கொரோனா: கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 83 பேர் உயிரிழப்பு

கொரோனா: கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 83 பேர் உயிரிழப்பு
Published on

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 2,573 பேர் கோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42, 836 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி அதிகபட்சமாக 60 பேர் உயிரிழந்தனர். அடுத்த நாட்களில் அதிகபட்சமாக 51 பேர் தான் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று மற்றும் இன்று என இரண்டு தினங்களில் மட்டும் தலா 83 பேர் உயிரிழந்துள்ளனர். 1,389 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது 29, 685 பேர் கொரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com