கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்..! 9 பேர் உயிரிழப்பு...!!

கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்..! 9 பேர் உயிரிழப்பு...!!
கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்..! 9 பேர் உயிரிழப்பு...!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தற்போது ‘எச்1என்1’ என்று அழைக்கப்படும் பன்றிக் காய்ச்சல் தலைதூக்கியுள்ளது.

கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் உயிரிழப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், அந்நோயைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனிடையே இந்தியாவில் கொரோனாவுக்கு 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இத்தாலியில் இருந்து வந்த 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆக்ராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உள்ளது எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தற்போது எச்1என்1 என்று அழைக்கப்படும் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 81 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், தற்போது வரை 9 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் எனவும் அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி ராஜ்குமார் கூறும்போது, “பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 81 பேரில் 20 பேர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாகாண ஆயுத ஊர்க்காவல் படையினை சேர்ந்தவர்கள். இவர்களில் 10 பேர் சிகிச்சை பெற்ற பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் இன்னும் சில நாட்களில் விடுவிக்கப்படுவார்கள். மாநிலத்தின் பிற பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பரவியுள்ள நிலையில் மீரட்டில் அதிகமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச சுகாதார சேவை இயக்குநரகத்தின் குழு பிப்ரவரி 29 அன்று மீரட் சென்றது. அதன்மூலம் எச்1என்1 வைரஸ் பரவுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com