“80% கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறியே இல்லை” - உத்தவ் தாக்ரே 

“80% கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறியே இல்லை” - உத்தவ் தாக்ரே 

“80% கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறியே இல்லை” - உத்தவ் தாக்ரே 
தங்களது மாநிலத்தில் உள்ள 80  சதவிகித கொரோனா நோயாளிகளுக்கு நோய்க்கான அறிகுறிகளே இல்லை என்று உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1990 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 26, 496 ஆக அதிகரித்துள்ளதாகவும், இவர்களில் 5ஆயிரத்து 804 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. 
 
 
நோய்த்தொற்று பாதிப்பால் 824 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 19,868 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் 7,628பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 3 ஆயிரத்து 71 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசும் போது தங்கள் மாநிலத்திலுள்ள கொரோனா நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்கு நோய்க்கான அறிகுறியே இல்லை என்று தெரிவித்தார். இந்த மாநிலத்தில் தற்போதைக்கு 7,628 நோயாளிகள் உள்ளனர். இது நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாகும்.  இவர்களில் ஒரு பகுதியினர் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
 
 
மேலும் தொடர்ந்து பேசிய உத்தவ் தக்ரே, "அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும்" என்று கூறினார். இதன் மூலம் ஊரடங்கை நீக்குவது பெரிய சவாலாக இருக்கும் என்பதை மறைமுகமாக அவர்  குறிப்பிட்டுள்ளார். மேற்கொண்டு அவர்,  “மருத்துவர்கள் தங்களது மருத்துவமனைகளை ஆரம்பிக்க வேண்டும். உடனே டயாலிசிஸ் மையங்களைத் தொடங்க வேண்டும். நாங்கள் சில விஷயங்களைத் திரும்பச் செய்ய உள்ளோம்.  இன்று மாலை நான்  அதைப் பற்றி ஆய்வு செய்யப் போகிறேன். 30 ஆம் தேதிக்குப் பிறகு என்ன செய்வது என்று தாங்கள் பிறகு தெரிவிப்போம். இந்த மாநிலத்தின் பொறுப்பு எங்களிடமே உள்ளது.  நாம் வைரஸை முற்றிலுமாக அழிக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com