இந்தியா
தற்கொலைப்படைத் தாக்குதல்: காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் 8 பேர் உயிரிழப்பு
தற்கொலைப்படைத் தாக்குதல்: காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் 8 பேர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில், காவல் நிலையம் அருகே பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில், பாதுகாப்புப் படையினர் எட்டு பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காவல்நிலைய வளாகத்திற்குள், வெளிநாட்டவர் என்ற போர்வையில் மூன்று நுழைவாயில்கள் வழியாக புகுந்த பயங்கரவாதிகள், இந்தக் கொடூரச் செயலை அரங்கேற்றினர். இதில் 8 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். பின்னர், சுதாகரித்துக் கொண்ட ராணுவம், துணை ராணுவப்படை மற்றும் போலீசார், காவல்துறையினரின் குடும்பத்தினரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். பின்னர் மூண்ட கடும் சண்டையில், தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.