உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் எட்டு பேர்; 28 நீதிபதிகள் இடமாற்றம் - கொலிஜியம் பரிந்துரை

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் எட்டு பேர்; 28 நீதிபதிகள் இடமாற்றம் - கொலிஜியம் பரிந்துரை

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் எட்டு பேர்; 28 நீதிபதிகள் இடமாற்றம் - கொலிஜியம் பரிந்துரை
Published on

ஒரே நேரத்தில் 8 பேருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கவும், 28 உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலிஜியம், ஒரே நேரத்தில் எட்டு நீதிபதிகளை பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக பதவி உயர்வளிக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போதைய ஐந்து தலைமை நீதிபதிகள் மற்றும் 28 உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலிஜியம் இந்த பரிந்துரையை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி, ஒரு நிகழ்வின் போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா நீதித்துறையில் காலியிடங்கள் பிரச்சினையை "அவசரகால அடிப்படையில்" தீர்க்க முயற்சிப்பதாகக் கூறினார்.

பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக பதவி உயர்வு செய்யப்படும் எட்டு நீதிபதிகள்:

1) நீதிபதி ராஜேஷ் பிண்டால் (அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி)

2) நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா (கல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி)

3) நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா (ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி)

4) நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி (கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி)

5) நீதிபதி சதீஷ் சந்திர சர்மா (தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி)

6) நீதிபதி ரஞ்சித் வி. மோர் (மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி)

7) நீதிபதி அரவிந்த் குமார் (குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி))

8) நீதிபதி ஆர்.வி.மலிமத் (மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி)

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com