ஆந்திரா| பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து; 8 பேர் பரிதாப மரணம்!
ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்துக்கு உட்பட்ட கொத்தவுட்ல மண்டலம் கைலாசபுரத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று (13.4.2025) மதியம் 12.45 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறுது நேரத்திலே ஆலைமுழுவதும் தீப்பரவ அங்கிருந்த பட்டாசுகள் சரமாறியாக வெடிக்க துவங்கினர். இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் தப்பித்து செல்ல முயன்றுள்ளனர்.
ஆனால், 2 பெண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயடைந்த 7 பேர் நரசிபட்டினம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டநிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பலரும் கிழக்கு கோதாவரி மாவட்டம் சமர்லகோட்டா கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், எதனால், இந்த விபத்து ஏற்பட்டது என்று விசாரணை மேற்கொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் இதற்கிடையே உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.