லாரி - மினி வேன் மோதல்: 7 பேர் உயிரிழப்பு

லாரி - மினி வேன் மோதல்: 7 பேர் உயிரிழப்பு
லாரி - மினி வேன் மோதல்: 7 பேர் உயிரிழப்பு

மினி வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் ஆனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள குக்கன்டி பகுதியில் இருந்து ஒரு மினிவேனில் கதிரி என்ற இடத்துக்கு 16 பேர் சென்று கொண்டிருந்தனர். மினிவேன் இன்று காலை தேசிய நெடுஞ்சாலை 42-ல் தனகல்லு என்ற ஊர் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேராக மோதியது. மோதிய வேகத்தில் மினிவேன் நொறுங்கியது.

இதில், வேனில் இருந்த ஏழு பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் சொல்லிவிட்டு, படுகாயமடைந்தவர்களை மீட்டு கதிரி மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com