ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் தீபாவளி போனஸ்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் தீபாவளி போனஸ்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் தீபாவளி போனஸ்
Published on

தீபாவ‌ளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம், பண்டிகை கால போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான முடிவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 17,951 ரூபாய் பண்டிகை கால போனஸை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் 12,30,000 ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும், அரசுக்கு 2,245 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தசரா, ‌ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால், அதற்கு முன்னதாக போனஸ்‌ வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com