நீந்தியே நிவாரண முகாம் வந்தார்: குடும்பத்தைத் தேடும் 76 வயது முதியவர்!
வீட்டில் இருந்து நீந்தியே நிவாரண முகாமுக்கு வந்த 76 வயது முதியவர், தனது குடும்பத்தினரைத் தேடி தவித்து வருகிறார்.
கேரளாவில், கடந்த 50 வருடத்தில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதால் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டதால் கேரள மாநிலம் வெள்ளக்காடாக மாறியது. மாநிலத்தின் பல பகுதிகளில் வீடு களின் மாடி வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரைகளிலும் தஞ்ச மடைந்தனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில் அங்கு மழை கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்துள்ளது. இதனால் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
இந்த மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று செங்கானூர். இங்கு பல பகுதிகளில் தண்ணீர் 10 அடிக்கும் அதிக மாக உள்ளது. இதனால் பலர் அந்த பகுதியை விட்டு வெளியேறிவிட்டனர். செங்கானூர் அருகே உள்ள குட்டநாடைச் சேர்ந்தவர் கருணா கரன். வயது 76. தனது மகன் பிஜூ, மனைவி லீலா, மருமகள் அனிலா, ஐந்து வயது பேரன் அம்ரிதா, எட்டு மாத பேத்தி ஐஸ்வர்யா ஆகியோ ருடன் வசித்து வந்தார். மழை வெள்ளம் அதிகமானதால் பிஜூ, குடும்பத்தினரை அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
இதையும் படிங்க:நிலச்சரிவில் சிக்கிய 18 மணி நேரம்: நடிகர் ஜெயராம் உருக்கம்!
கருணாகரன் மட்டும் வீட்டில் இருந்தார். பிறகு மழை வெள்ளம் அதிகரித்ததால் வீட்டில் இருக்க முடியாத நிலையில், மகனின் போன் நம்ப ரை மட்டும் ஒரு பேப்பரில் எழுதிவைத்துக்கொண்டு நீந்தி செம்பக்குளம் பகுதிக்கு வந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆலப்புழா அருகில் உள்ள திருவாம்படி பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைத்தனர். இந்நிலையில் இப்போது மழை குறைந்துள்ளதால் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயன்றார். எழுதி வைத்திருந்த மகனின் போன் நம்பரில் பேசினார். போன் ரீச் ஆகவில்லை. பலமுறை தொடர்பு கொண்டும் முடியவில்லை.
இதனால் அவர்களுக்கு என்ன ஆனதோ என்று கவலையில் ஆழ்ந்துள்ளார்.
இவரைப் போல பலரும் தங்கள் குடும்பத்தைப் பிரிந்து பல்வேறு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துவருகின்றனர்.