\
75 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - கொடூரன் கைது

75 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - கொடூரன் கைது

75 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - கொடூரன் கைது
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர். 

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் ரயில்வே ஊழியரால் ஒரு மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஹர்தாலா ரயில் நிலையத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ரயில்வே நிலையத்தில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நின்றுக்கொண்டிருந்தார். அவரை இழுத்து சென்ற ரயில்வே ஊழியர் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிப்புக்குள்ளான மூதாட்டியால் அதிர்ச்சி காரணமாக பேச முடியவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியான ரயில்வே ஊழியர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கடந்த மாதம் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் 70 வயது பிரெஞ்ச் மூதாட்டி அடித்து துன்புறுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com