72வது சுதந்திர தினம் : கோலாகல கொண்டாட்டம்

72வது சுதந்திர தினம் : கோலாகல கொண்டாட்டம்
72வது சுதந்திர தினம் : கோலாகல கொண்டாட்டம்

நாட்டின் 72ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தலைநகர் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். தற்போதுள்ள மத்திய அரசின் சார்பாக கடைசியாக பிரதமர் மோடி கொடியேற்றுவதால், முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 70 ஆயிரம் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

செங்கோட்டைக்குச் செல்லும் சாலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செங்கோட்டையில் மட்டும் 200 சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையம், ரயில் நிலையங்களில் மத்தியப் பாதுகாப்புப் படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பாரா கிளைடிங் உள்ளிட்ட வான் சார்ந்த செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வானில் ஊடுருவல் இருந்தால் சுட்டு வீழ்த்த தேசிய பாதுகாப்புப் படையின் துப்பாக்கி சுடும் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com