72வது சுதந்திர தினம் : பாரதியார் கவிதையை கூறி பிரதமர் உரை

72வது சுதந்திர தினம் : பாரதியார் கவிதையை கூறி பிரதமர் உரை
72வது சுதந்திர தினம் : பாரதியார் கவிதையை கூறி பிரதமர் உரை

‘எல்லாரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என கூறியுள்ளார் பாரதியார்’ என்று பிரதமர் மோடி உரையில் குறிப்பிட்டார்.

நாட்டின் 72ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியகொடியேற்றினார். பிரதமராக பதவியேற்ற பிறகு 5வது முறையாக சுதந்திர தினத்தன்று நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார். இதைதொடர்ந்து மோடி உரையாற்றி வருகிறார். அந்த உரையில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். நாட்டில் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாடு புதிய வளர்ச்சிகளை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக இருந்தது. நாட்டின் பல்வேறு இடங்களில் பருவமழை சிறப்பாக பெய்த நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இயற்கை சீற்றங்களால் பாதிப்பு அடைந்துள்ள மாநிலங்களுக்கு துணை நிற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “சர்வதேச அளவில் வலிமையான பொருளாதார நாடுகளில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாடு புதிய வளர்ச்சிகளை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களுக்கு தலைவணங்குகிறேன்; அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் உள்ளது” என்றார். அத்துடன் ‘எல்லாரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என கூறியுள்ளார் பாரதியார்’ என பாரதியாரின் கவிதையை குறிப்பிட்டு கூறினார். மேலும், “இயற்கை சீற்றங்களால் பாதிப்பு அடைந்துள்ள மாநிலங்களுக்கு துணை நிற்க வேண்டும். சர்வதேச அளவில் வலிமையான பொருளாதார நாடுகளில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது. 2014ல் நம்மை பார்த்து சிரித்தவர்கள் ஏராளம். தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்த போது கைகொட்டி சிரித்தார்கள். ஆனால் இன்று அந்த தூய்மை இந்தியா திட்டம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com