தேர்வின்போது ஹிஜாபுக்கு அனுமதியளித்த 7 ஆசிரியர்கள் “சஸ்பெண்ட்”

தேர்வின்போது ஹிஜாபுக்கு அனுமதியளித்த 7 ஆசிரியர்கள் “சஸ்பெண்ட்”
தேர்வின்போது ஹிஜாபுக்கு அனுமதியளித்த 7 ஆசிரியர்கள்  “சஸ்பெண்ட்”

(கோப்பு புகைப்படம்)

கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வின் போது மாணவிகளை ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதித்த 7 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள சி.எஸ்.பாட்டீல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.எஸ்.பாட்டீல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் போது மாணவர்களை ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதித்த 7 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு மைய கண்காணிப்பாளர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 3,444 தேர்வு மையங்களிலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் எந்தவித மோதல் அல்லது அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 60,000 அரசு அதிகாரிகள் பரீட்சைகளைக் கண்காணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் 15 அன்று, கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் , கர்நாடக பள்ளிகளுக்குள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் அத்தியாவசிய நடைமுறையின் கீழ் வராது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சீருடை அணிவதில் உள்ள கட்டுப்பாடுகள் நியாயமானவை என்றும், மாணவர்கள் அதை எதிர்க்க முடியாது என்றும் அதில் தீர்ப்பளித்தது. இதையடுத்து நடைபெற்ற பொதுத் தேர்வில் ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகளை ஆசிரியர்கள் தடுக்காமல், அதை அகற்ற சொல்லாமல், தேர்வெழுத அனுமதித்ததால் ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com