\
கங்கையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு!

கங்கையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு!

கங்கையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு!
Published on

உத்தரபிரதேசத்தில் கங்கை ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள லுஹாரி கிராமத்தை சேர்ந்த 10 பேர், குழந்தையின் முடி இறக்கும் நிகழ்ச்சிக்காக, பிரிஜ்ஹாட் பகுதிக்கு வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

 முடி இறக்கிவிட்டு கங்கை ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது இரண்டு சிறுவர்கள் ஆழமாக பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர். இதைக்கண்ட குடும்பத்தினர், அவர்களை காப்பாற்றுவதற்காக ஆற்றுக்குள் குதித்தனர். இதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்பு படையினர் விரைந்து வந்து 5 பேரின் உடல்களை மீட்டனர்.

உயிரிழந்தவர்கள், பண்டி (21), சஞ்சீவ் (18), மனோஜ் (20), விபின் (21), மற்றொரு சஞ்சீவ் (17), தர்மேந்திரா (16), கவுதம் (20) என அடையாளம் தெரிய வந்துள்ளது. இதில் கவுதம், தர்மேந்திரா உடல்களை தேடி வருகின்றனர். 

கங்கை ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த தகவல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com