மகாராஷ்டிரா : ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழப்பு? மக்கள் போராட்டம்.

மகாராஷ்டிரா : ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழப்பு? மக்கள் போராட்டம்.

மகாராஷ்டிரா : ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழப்பு? மக்கள் போராட்டம்.
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாலா சோபாராவிலுள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக ஏழு பேர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஏழுபேர் நேற்று ஒரே நாளில் திடீரென்று உயிரிழந்தனர்.  மகாராஷ்டிராவில் தொடர்ந்து கொரோனா அதிகரித்துவரும் சூழலில், மும்பையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நாலா சோபாராவில் இயங்கும் விநாயகா மருத்துவமனையில் உயிரிழந்த ஏழு பேரின் உறவினர்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் உயிர் இழப்புக்கு மருத்துவர்களும், மோசமான நிர்வாகமும்தான் காரணம் என்று குற்றம் சாட்டினர்.  

மருத்துவமனையை முற்றுகையிட்ட உயிரிழந்தவர்களின் உறவினர்கள், ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்டவர்களை மும்பை அல்லது பிற இடங்களுக்கு மாற்றி முறையான சிகிச்சை அளித்திருப்போம் என தெரிவித்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவமனை அதிகாரிகள், “வயது முதிர்ந்த இந்த நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது. அவர்கள் ஐசியுவில் மூன்றாம் கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். அதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது. விநாயகா மருத்துவமனைதான் வசாய்-விரார் நகராட்சியின் மூன்றாம் நிலை பராமரிப்பு மையமாகும். சிறிய மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சையளிக்க இயலாமல் இடமாற்றம் செய்யப்படும் நோயாளிகளை நாங்கள் அனுமதித்து சிகிச்சையளிக்கிறோம்" என்று கூறினர்.

இப்பகுதியில் 7,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தினமும் ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படுகிறது" என்று பகுஜன் விகாஸ் அகாதி கட்சியைச் சேர்ந்த தாக்கூர் கூறினார்.  

மகாராஷ்டிராவில் நேற்று ஒருநாளில் மட்டும் 63,000 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 400 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34.07 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகியிருக்கிறது. இதுவரை மாநிலத்தில் 58,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com