நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்.. லலித் ஜாவுக்கு 7 நாட்கள் காவல்

நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக ஆறாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள லலித் ஜாவை, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் குளிர்க்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதில் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் நான்கு பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவை சேர்ந்த ஆசிரியர் லலித் ஜா, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைதான லலித் ஜா, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஏழு நாள் காவலில் அடைக்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த பாஜக எம்,பி பிரதாப் சிம்ஹா விருந்தினரின் பாஸ்களை பயன்படுத்தி, கைது செய்யப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்தது தெரியவந்துள்ள நிலையில், அதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு, மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சித் தலைவருடன் லலித் ஜா இருக்கும் புகைப்படம் வெளியான நிலையில், அது தொடர்பாக, அவரிடம் சிறப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com