7 குழந்தைகள் உயிரைப் பறித்த டெல்லி தீ விபத்து.. மருத்துவமனையின் உரிமையாளர் கைது!

டெல்லியில் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மருத்துவமனை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விவேக் விகார் பகுதியில் நேற்றிரவு நேரிட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்தன.
மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்து
மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்துpt web

கிழக்கு டெல்லியில் விவேக் விகார் பகுதியில் உள்ள குழந்தைகள் நல பராமரிப்பு மருத்துவமனையில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 12 குழந்தைகள் மீட்கப்பட்டன. இதில் 7 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன.

இந்நிலையில், மருத்துவமனையின் உரிமையாளரை காவலர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையின் உரிமையாளரான நவீன் சின்சி மீது ஐபிசி பிரிவுகள் 336, 304A மற்றும் 34ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் மீது ஏற்கனவே சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை துவங்கப்பட்டபோது அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் உரிய அனுமதி பெற்றுதான் மருத்துவமனை நடத்தப்பட்டதா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கக்கூடிய, அலட்சியமாக பணியாற்றிவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com