\
பாக்., வெற்றியை கொண்டாடினால்.. தேசத்துரோக வழக்கு - யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

பாக்., வெற்றியை கொண்டாடினால்.. தேசத்துரோக வழக்கு - யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

பாக்., வெற்றியை கொண்டாடினால்.. தேசத்துரோக வழக்கு - யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை
Published on: 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியோர் மீது தேசத்துரோக வழக்கு பாயும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 24ம் தேதி நடந்த இந்தியா - பாகிஸ்தான் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. இதில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக உத்தரபிரதேச மாநிலத்தின் 5 மாவட்டங்களிலிருந்து 7 பேர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் இதே போன்ற கொண்டாட்டங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநில முதலமைச்சசர் யோகி ஆதித்யநாத், ''இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியோர் மீது தேசத்துரோக வழக்கு பாயும்'' என எச்சரித்துள்ளார். இதற்கு பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com