இந்தியா
போலி ரெம்டெசிவிர் மருந்து தயாரித்த 7 பேர் கைது: டெல்லி போலீஸ் அதிரடி
போலி ரெம்டெசிவிர் மருந்து தயாரித்த 7 பேர் கைது: டெல்லி போலீஸ் அதிரடி
போலி ரெம்டெசிவிர் மருந்தை தயாரித்து விற்பனை செய்த 7 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு ஆளாகி நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துக்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடு ஏற்படுவதால் பல மாநிலங்களில் மக்கள் நாள் கணக்கில் காத்திருந்து வாங்கிச்செல்கிறார்கள். அதேசமயம், தட்டுப்பாடு எற்பட்டுள்ளதை அடுத்து கள்ளச்சந்தையில் இம்மருந்து 20 ஆயிரம் ரூபாய்க்குமேல் விற்கப்படுகிறது.
இந்நிலையில், போலி ரெம்டெசிவர் மருந்து தயாரித்து விற்ற 7 பேரை டெல்லி குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர். அதோடு, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அவர்களின் போலி ரெம்டெசிவிர் உற்பத்தி நிலையத்திற்கும் சீல் வைத்துள்ளார்கள்.