\
69ஆவது குடியரசு தின கொண்டாட்டம்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

69ஆவது குடியரசு தின கொண்டாட்டம்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

69ஆவது குடியரசு தின கொண்டாட்டம்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு
Published on

நாட்டின் 69ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றுவதைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற உள்ளது. நாட்டின் பலத்தை பறைசாற்றும் வகையில் கண்கவர் அணிவகுப்புகளும் நடைபெற உள்ளன. இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பம்சமாக தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த பத்து தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சேன் லூங், மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி, புருனே சுல்தான், கம்போடிய பிரதமர் ஹன் சென், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் , லாவோஸ் பிரதமர் தோங்லோன் சிசோலித் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். குடியரசுத்தின விழாவையொட்டி டெல்லி முழுவதும் 50,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com