கான்பூரில் இதுவரை 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

கான்பூரில் இதுவரை 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

கான்பூரில் இதுவரை 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இதுவரை 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23-ஆம் தேதி கான்பூரை சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர், அண்டை வீட்டார் என பலருக்கும் சோதனை செய்யப்பட்டது. இதில் இதுவரை 66 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 45 ஆண்கள் மற்றும் 21 பெண்கள் ஜிகா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர். பகலில் கடிக்கக்கூடிய ஏடிஸ் வகை கொசுக்களால் ஜிகா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com