652 இணையதளங்கள் முடக்கம் - மத்திய அரசு நடவடிக்கை

652 இணையதளங்கள் முடக்கம் - மத்திய அரசு நடவடிக்கை
652 இணையதளங்கள் முடக்கம் - மத்திய அரசு நடவடிக்கை

நாட்டை அச்சுறுத்தும் வகையிலும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்த 652 இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு ஆபாச இணையதள பக்கங்கள் தான் காரணம் என்றும் அதனை முடக்கவேண்டும் என்றும் நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது. மேலும் ஆபாச இணையதளங்கள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இவை குறித்து நாடாளுமன்றத்திலும் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுவிக்கும் இணையதளங்கள் மற்றும் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் இணையதளங்களை முடக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி , கடந்த ஜூன் வரை 652 இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அவற்றில், 83 இணைய தள பக்கங்கள் நீதிமன்ற உத்தரவின் படி முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோக்கள் அடங்கிய இணையதள பக்கங்கள் அதிக அளவில் முடக்கப்பட்டுள்ளன. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் வகையில் உள்ள இணையதளங்களும் இதில் அடங்கும். இதேபோல், நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பயங்கரவாதத்தினை ஊக்குவிக்கும் வகையிலும் இயங்கி வந்த இணையதள பக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பின்னர் முடக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே, ஆபாச இணையதள பக்கங்களை முடக்குவது தனிநபர் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று ஒரு தரப்பினர் மத்திய அரசு ந‌டவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டது அரசின் சிறந்த நடவடிக்கை என்று மற்றொரு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com