\
65 Padma Award Winners Receive Honors from President Murmu
பத்ம விருதுகள்Pt web

2-ம் கட்ட பத்ம விருதுகள் அறிவிப்பு.. ரோகித் ஷர்மா முதல் மம்மூட்டி வரை!!

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு 131 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக 65 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று பத்ம விருதுகளை வழங்கியுள்ளார்.
Published on

கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், அறிவியல், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தான், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு 131 தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பத்ம பூஷன் விருது
பத்ம பூஷன் விருதுx

பத்மவிருதுகள் வழங்கும் விழா 2 கட்டமாக நடைபெறும் என தெரிவித்திருந்த நிலையில், டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் கடந்த மே மாதம் 25-ம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் உட்பட இந்தியா முழுவதும் 66 பேருக்கு பத்ம விருதுகள் அன்று வழங்கப்பட்டிருந்தது.

இந்தசூழலில் தான், இரண்டாம் கட்டமாக 65 பேருக்கு பத்ம விருதுகள் இன்று வழங்கப்பட்டிருக்கிறது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வரும் இந்த விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்றனர். இவ்விழாவில், கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருதும், நடிகர் மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா-வும் பத்ம ஸ்ரீ விருது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

65 Padma Award Winners Receive Honors from President Murmu
டெல்லி | தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள்.. குடியரசுத் தலைவர் அறிவிப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com