தமிழக அரசிடம் பணமில்லையா ? மனமில்லையா ? - ப.சிதம்பரம் கேள்வி

தமிழக அரசிடம் பணமில்லையா ? மனமில்லையா ? - ப.சிதம்பரம் கேள்வி
தமிழக அரசிடம் பணமில்லையா ? மனமில்லையா ? - ப.சிதம்பரம் கேள்வி
Published on

மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் போது 1993ம் ஆண்டு முதல் 15 மாநிலங்களில் மொத்தம் 620 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 144 பேரும், குஜராத்தில் 131 பேரும் கர்நாடகாவில் 75 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல்  உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144. இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு என்பது வெட்கக்கேடு.

மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா?. உயிரிழந்த 144 மனிதர்கள் எந்தச் சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்களேன்'' என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com