இந்தியா
கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்?
கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்?
(கோப்பு படம்)
ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரா மாநிலம் தேவிபட்டணம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு ஒன்றில் 60 பேர் பயணம் செய்தனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. 60 பேர் நீரில் மூழ்கிய நிலையில் 27 பேரை மீட்பு படையினர் மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 33 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களை தேசிய பேரிட மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.