\
Karnataka CM DK. Shivakumar
Karnataka CM DK. Shivakumar ani

’தமிழ்நாட்டிற்கு அவ்வளவு நீர் தரமுடியாது..’ உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடகா முடிவு?

அணைகளில் நீர் இருப்பு மோசமெனக் கூறும் கர்நாடகா அரசு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை எதிர்த்து சட்டப் போருக்கு தயாராகிறது.
Published on
Summary

காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செப்டம்பர் 9 முதல் 15 நாட்கள் தினமும் 6,000 கனஅடி நீரை தமிழ்நாட்டிற்கு விட கர்நாடகாவை கட்டாயப்படுத்தியுள்ளது. அணைகளில் நீர் இருப்பு மோசமடைந்ததால், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும், குழுவிடமே சீராய்வு மனு தாக்கல் செய்யவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தினமும் 6,000 கனஅடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. செப்டம்பர் 9 முதல் அடுத்த 15 நாட்களுக்குத் தமிழ்நாட்டிற்குத் தினமும் 6,000 கனஅடி நீரைக் கர்நாடகா உறுதி செய்ய வேண்டும் என்ற 'காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின்' பரிந்துரையை 'காவிரி நீர் மேலாண்மை ஆணையம்' செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

Cauvery River
Cauvery River ANI

இது குறித்து அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமாருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், சட்டக் குழுவின் பரிந்துரைப்படி வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்ய ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் என்.செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவை எதிர்த்து அக்குழுவிடமே சீராய்வு மனு தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மிகக் மோசமான நிலையில் உள்ளதால், தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடத் தேவையான தண்ணீர் தங்களிடம் இல்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Karnataka CM DK. Shivakumar
சென்னையின் 2-வது விமான நிலையத் திட்டம்.. பரிசீலனையில் செய்யூர், மாநெல்லூர்.?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com