கேரள தங்கக் கடத்தல்: கைதான ரமீசுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா? 60 சிம்கார்டு பறிமுதல்

கேரள தங்கக் கடத்தல்: கைதான ரமீசுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா? 60 சிம்கார்டு பறிமுதல்
கேரள தங்கக் கடத்தல்: கைதான ரமீசுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா? 60 சிம்கார்டு பறிமுதல்

தங்கக் கடத்தல் வழக்கில் தீவிரவாத பின்புலம் உள்ளவராக கருதப்படும் ரமீஸிடம் இருந்து 60 சிம்கார்டுகளை பறிமுதல் செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மலப்புரத்தை சேர்ந்த தங்க வியாபாரி ரமீஸ் கடந்த 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து சுமார் 60 சிம் கார்டுகளை பறிமுதல் செய்த தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் அவை வாங்கப்பட்ட விதம் மற்றும் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதில் ரமீசுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரமீஸ் மீது ஏற்கெனவே பல வழக்குகள் இருப்பதுடன் கடத்தல் விவகாரத்தில் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை பயங்கரவாத செயல்களுக்கு அளித்து உதவியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரமீஸ், கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா உள்ளிட்டோரிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும் அவர்களிடம் இருந்து கடத்தல் தங்கத்தை பெற்று அதை விற்று பணமாக்கி தந்ததும் விசாரணையில் ஏற்கனவே தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com