தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற 6 வயது பேரன்

தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற 6 வயது பேரன்
தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற 6 வயது பேரன்

மருத்துவமனையில் 6 வயது சிறுவன் தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச்சென்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் டியோரியா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முதியவரான சிடி யாதவ் என்பவர் காயங்கள் காரணமாக 2 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அவருடன் மகள் மற்றும் பேரன் மருத்துவமனையில் தங்கி பார்த்து வந்துள்ளனர். அங்கு மருத்துவ பரிசோதனைகளுக்கு அவரை அழைத்துச் செல்வதற்காக ஒவ்வொரு முறையும் வார்டு உதவியாளர் ரூ.30 கேட்டுள்ளார்.

இதனால் முதியவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து 6 வயது பேரன் தள்ள, முன்பக்கம் முதியவரின் மகள் இழுத்துச்சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ, மருத்துவமனையில் வார்டு உதவியாளராக இருந்தவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com