வயிற்றில் காற்று நிரப்பி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு ?

வயிற்றில் காற்று நிரப்பி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு ?

வயிற்றில் காற்று நிரப்பி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு ?
Published on

விளையாட்டுக்காக சக நண்பர்கள் வயிற்றுக்குள் காற்று நிரப்பியதால் 6 வயது சிறுவன் உயிரிழந்தான்.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் நேற்று விடுமுறை தினம் என்பதால் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது காற்று பம்பு மூலம் வயிற்றுக்குள் காற்று நிரப்பி விளையாடியுள்ளனர். இதனால் வயிற்றில் காற்று நிரம்பியதால் மூச்சுத்திணறி 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

விபத்து குறித்து தகவல் தெரிவித்த அப்பகுதி காவல்துறை, உயிரிழந்த சிறுவனின் தந்தை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போது பம்பு மூலம் வயிற்றுக்குள் காற்றை நிரப்பியுள்ளனர். இதனால் காற்று நிரம்பி மூச்சுத்திணறிய சிறுவன் உயிரிழந்துள்ளான் என்று தெரிவித்தார்.

விபத்து குறித்து கருத்து தெரிவித்த உயிரிழந்த சிறுவனின் தந்தை, நான் தூங்கிக் கொண்டு இருந்தேன். அப்போது என் மகனை இரண்டு சிறுவர்கள் விளையாடுவதற்காக அழைத்துச் சென்றனர். திரும்பி வரும்போது மகனின் வயிறு வீங்கி இருந்தது. உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அதற்குள் அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் எனத் தெரிவித்தார்.

உடற்கூராய்வு முடிவு வெளிவந்த பிறகே சிறுவனின் உயிரிழப்புக்கான முழு காரணம் தெரியவரும் போலீசார் தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com