6 ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு தொடர்ந்து ஆறுமுறை பட்ஜெட் தாக்கல் செய்யும் பெருமையை பெறுகிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்கோப்புப்படம்

2019 முதல் தொடர்ந்து முழுமையான ஐந்து மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1 ஆம் தேதி (இன்று) இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய நிதி அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ப. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் இதுவரை ஐந்து முழு பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளனர்.

Nirmala Sitharaman
Nirmala SitharamanShailendra Bhojak

முன்னதாக முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 10 மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்து, அதிகபட்ஜெட்களை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதில் 5 முழு பட்ஜெட்கள், 1959-64 காலகட்டத்தில் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தேசாய் தொடர்ந்து தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் 5 முழுமையான பட்ஜெட்களையும் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தொடர்ந்து தாக்கல் செய்யும் பெருமையை பெறுகிறார்.

நிர்மலா சீதாராமன்
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது; புதிய முதல்வர் தேர்வு

வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய அரசு பொறுப்பேற்கும் வரையிலான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். ஏற்கெனவே தொழில்துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இடைக்கால பட்ஜெட்டில் ஈர்க்கத்தக்க வகையிலான எந்த அறிவிப்பும் இருக்காது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்ட்விட்டர்

ஜூன்மாதம் புதிய அரசு பதவியேற்றபின், ஜூலை மாதத்தில் 2024- 25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மோடி தலைமையிலான அரசு 2014 ஆம் ஆண்டு பதவியேற்றபின், அருண் ஜெட்லி, 2014-15 முதல் 2018-19 வரை ஐந்து பட்ஜெட்களை தாக்கல் செய்தார். 2017 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 1 ஆம்தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முறையை ஜெட்லி கொண்டுவந்தார்.

அருண்ஜெட்லி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது 2019-20 இடைக்கால பட்ஜெட்டை கூடுதல் பொறுப்பு வகித்த பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். 2019 பொதுத்தேர்தலுக்குப்பிறகு மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற மோடி அரசு, நிதி அமைச்சர் பொறுப்பை நிர்மலா சீதாராமனுக்கு அளித்தது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1970-71 நிதியாண்டில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவருக்குப்பிறகு மத்திய நிதி அமைச்சராக பதவியேற்ற பெண் என்ற பெருமை நிர்மலா சீதாராமனுக்கு உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com