உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல்!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல்!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதிக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தின் ஊழியர்களுக்கு உரிய மருத்துவ பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று தலைமை நீதிபதியிடம் நீதிபதி சந்திரசூட் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக நீதிபதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பன்றிக் காய்ச்சலை ஹெச்1என்1 என்ற வைரஸ் உருவாக்குகிறது. இந்த ஹெச்1என்1 வைரஸ் முதன்முதலாக பன்றிகளிடம் இருந்து பன்றிகளை வளர்த்து கையாண்டு வந்த ஊழியர்களுக்கும், அதன் சிகிச்சையோடு தொடர்புடைய மருத்துவர்களுக்கும் பரவியது. அப்படியே பொதுமக்களுக்கும் இந்த காய்ச்சல் பரவியது. இந்தியாவைப் பொருத்தவரை 2009-ம் ஆண்டு பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com