\
accident
accidentpt desk

ஆந்திரா: கார் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி; ஏழுமலையானை தரிசித்துவிட்டு வந்தபோது சோகம்

கடப்பா அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

ஆந்திர மாநிலம் ஆனந்தபுரம் மாவட்டம் தாடிபத்ரி மற்றும் கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் சிலர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாகனத்தில் சொந்த ஊருக்கு நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர்.

accident
accidentpt desk

பக்தர்கள் சென்ற அந்த வாகனம், இன்று அதிகாலையில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கொண்டாபுரம் மண்டலம் பி.அனந்தபுரம் சித்ராவதி ஆற்றுக்கு இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தாடிபத்ரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

accident
accidentpt desk

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் 20 நிமிடத்தில் சொந்த ஊரான தாடிபத்திரிக்கு செல்ல இருந்த பக்தர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com