இந்தியா
கேரளாவில் 114 ஆகக் குறைந்தது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை..!
கேரளாவில் 114 ஆகக் குறைந்தது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை..!
கேரளாவில் புதியதாக 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது.
கேரளாவில் இன்றைக்குக் கிடைத்துள்ள மருத்துவ அறிக்கை முடிவின்படி ஆறு பேருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஐந்து பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்றும் ஒருவர், அவர்களின் தொடர்பிலிருந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 21 பேர் வீடு திரும்பியுள்ளனர். காசர்கோட்டில் 19 பேரும், அலப்புழாவில் 2 பேரும் எனக் குணமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பல தகவல்களைத் தெரிவித்தார். அவர் பேசுகையில், “ கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 409 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 291 பேர் குணமடைந்து உள்ளனர். இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 129லிருந்து 114 ஆகக் குறைந்துள்ளது.
இதுவரை மாநிலம் முழுக்க 46,323 பேர் மருத்துவக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 45,925 பேர் வீடுகளிலும் 398 பேர் மருத்துவமனைகளிலும் மருத்துவக் கண்காணிப்பிலிருந்து வருகின்றனர். இதுவரை நோய் அறிகுறிகள் உள்ள 19,756 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை மேற்கொண்டதில் 19,074 பேரின் முடிவுகள் “நெக்கடிவ்” என வந்துள்ளது” எனக் கூறினார்.
.