அயோத்தி ராமர் கோயி​ல்
அயோத்தி ராமர் கோயி​ல்முகநூல்

அயோத்தி ராமர் கோயி​ல் பிரசாதம் எனக்கூறி 6 லட்சம் பேரிடம் பல கோடிகள் மோசடி! வெளிவந்த உண்மை!

அயோத்தி ராமர் கோயி​லில் பிராண பிர​திஷ்டை பிர​சாதம் எனக் கூறி 6 லட்​சம் பேரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
Published on

அயோத்தி ராமர் கோயி​லில் குழந்தை ராமர் சிலை​யின் பிராண பிர​திஷ்டை நிகழ்ச்சி கடந்​தாண்டு ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி முன்​னிலை​யில் நடை​பெற்​றது. இந்நிலையில், பிராண பிரதிஷ்டைக்கு பிறகு சுவாமி பிரசாதம் கிடைக்கவில்லை என அயோத்தி காவல் நிலை​யங்​களுக்கு புகார்​கள் வரத் தொடங்​கின. அந்த புகார்​கள் மாநில சைபர் கிரைம் பிரி​விடம் ஒப்​படைக்​கப்​பட்​டன. சைபர் கிரைம் பிரிவு நடத்​திய விசா​ரணை​யில் பல லட்சம் பேரிடம் பல கோடிகளை மோசடி மன்னன் ஒருவர் ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

ராமர் கோயில் பிரசாதத்தை வீட்டிற்கே வந்து வழங்குவதாக கூறி, போலி வலைதளத்தை உருவாக்கி லட்சணக்கனக்கான பக்தர்களை ஏமாற்றியுள்ளனர் அந்த மோசடி நபர். இந்த மோசடியில் காசியாபாத், இந்திராபுரத்தில் உள்ள வின்ட்சர் பூங்காவைச் சேர்ந்தவரும், தற்போது அமெரிக்காவில் வசிக்கும்வருமான ஆஷிஷ் சிங்தான் மூளையாக செயல்பட்டார் என்று தெரியவந்தது . 2024 கும்பாபிஷேக விழாவிற்கு சில வாரங்களுக்கு முன்பு, khadiorganic.com என்ற போலி போர்ட்டலைத் தொடங்கி, டிசம்பர் 19, 2023 முதல் ஜனவரி 12, 2024 வரை 6.3 லட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச பக்தர்களிடமிருந்து பிரசாத ஆர்டர்களை எடுத்திருக்கிறார்.

ராமர் கோயில் பிர​சாதம் பெற இந்​தி​யா​வில் ரூ.51 எனவும், வெளி​நாட்​ட​வர்​களுக்கு 11 டாலர் எனவும் கட்​ட​ணம் நிர்​ண​யித்​துள்​ளார். அந்​தவகை​யில், 3 கோடியே 85 லட்​சம் ரூபாயை, 6 லட்​சத்து 30,695 பக்​தர்​களிடம் ஏமாற்றி வசூல் செய்​துள்​ளார்.

அயோத்தி ராமர் கோயி​ல்
''முருகன் மாநாடு அல்ல; சங்கிகள் மாநாடு" - அமைச்சர் சேகர்பாபு

இதையடுத்து ஆசிஷை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், மீத​முள்ள 1 கோடியே 70 லட்​சத்து 47,313 ரூபாயை​யும் மீட்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. இவர்மீது, ஐபிசி பிரிவு 420, ஐடி சட்டம் பிரிவு 66D மற்றும் பாஸ்போர்ட் சட்டம், 1967 இன் பிரிவு 12(3) ஆகியவற்றின் கீழ் ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவரிடமிருந்த ஒரு மடிக்கணினி, இரண்டு ஐபோன்கள், ரூ.13,970 ரொக்கம், 16 அமெரிக்க டாலர்கள் மற்றும் அமெரிக்க மற்றும் இந்திய அடையாள அட்டைகள், டெபிட் கார்டுகள், வாஷிங்டனில் உள்ள ஓட்டுநர் உரிமம் மற்றும் ஒரு சுகாதார அட்டை உள்ளிட்ட ஏராளமான அடையாள மற்றும் வங்கி ஆவணங்களை போலீசார் கைப்பற்றியிருக்கின்றனர்.

தற்​போது அயோத்தி ராமர் கோயில் வளாகத்​தில், சன்னதி​களுக்கும் பிராண பிர​திஷ்டை நடை​பெற்றுள்ளது. அதனால் போலி இணை​யதளங்​கள் பெரு​கும் அபா​யம் உள்​ள​தாக போலீ​ஸார் எச்​சரித்​துள்​ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com