தெலங்கானா: ஆட்டோ-வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

தெலங்கானா: ஆட்டோ-வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
தெலங்கானா: ஆட்டோ-வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

தெலங்கானாவில் ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மங்காபெட்டா மண்டலத்தின் கோமாட்டிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆட்டோ ஒன்றில் கோயிலுக்குச் சென்று விட்டு அதிகாலையில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்த ஆட்டோ மீது வெங்கடாபுரம் பகுதியில் வேன் ஒன்று மோதியது. இதில், ஆட்டோவில் பயணித்த 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். சாலை விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com