\
ஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு

ஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு

ஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
Published on

ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்கண்ட் மாநிலம் கார்ஹ்வா பகுதியில் இருந்து சட்டீஸ்கருக்கு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. 

இதில் பயணிகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 39 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில் மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் இன்னும் விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்தனர். 

ஜூன் 10 ஆம் தேதி ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டம் பாட்னாவிலிருந்து புறப்பட்ட பேருந்து இரும்பு ஏற்று வந்த டிரெய்லர்-டிரக் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com