பாக்பத்தில் லட்டு ம்ஹோத்சவ் விழாவில் மேடை இடிந்து 7 பேர் பலி, 80 பேர் காயம்
உ.பி.யில் மத நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விழுந்ததில் 6 பேர் பலி, 50 பேர் காயம். இந்த சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வேதனை தெரிவித்துள்ளதோடு, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் ஜெயின் சமூகத்தினர் கடந்த 30 வருடங்களாக லட்டு மஹோத்சவ் என்ற மத நிகழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த வருடம் கொண்டாடப்பட இருந்த இந்த வைபவத்திற்காக கோவில் நிர்வாகம் பக்தர்களுக்காக மூங்கில் மேடை அமைத்துக்கொடுத்திருந்தது. இதில் லட்டுகள் வழங்குவதற்காக மூங்கில் மேடையின் மீது பக்தர்கள் ஏறியுள்ளனர். அப்பொழுது, மூங்கில் மேடையானது பாரம் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் பக்தர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
விபத்து நடந்த தகவல் தெரியவந்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன், சிறு காயங்கள் உள்ளவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வேதனை தெரிவித்துள்ளதோடு, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய முதலமைச்சர் பிரார்த்திப்பதாக அவரது அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.