இந்தியா
ருமேனியாவிலிருந்து 249 பேருடன் இந்தியா வந்தடைந்த விமானம்: இதுவரை எத்தனை பேர் மீட்பு?
ருமேனியாவிலிருந்து 249 பேருடன் இந்தியா வந்தடைந்த விமானம்: இதுவரை எத்தனை பேர் மீட்பு?
உக்ரைனில் இருந்து மேலும் 249 இந்தியர்கள் மீட்கப்பட்டு சிறப்பு விமானம் மூலம் தாயகத்துக்கு பத்திரமாக அழைத்துவரப்பட்டனர்.
உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அங்கு வசித்த மாணவர்கள் உள்பட இந்தியர்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைனில் இருந்து 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இவர்களில் ஏற்கெனவே ஆயிரம் பேர் தாயகம் அழைத்துவரப்பட்டனர். தற்போது 5ஆவதாக சிறப்பு விமானம் ஒன்று ருமேனியாவிலிருந்து இந்தியா புறப்பட்டுள்ளது. அதில் 249 பேர் தாயகம் அழைத்துவரப்படுகின்றனர். இதுவரை 5 விமானங்களில் மொத்தம் 1,156 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.