உ.பி. அரசு காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கொரோனா - தொற்றுடையவர்களில் 5 பேர் கர்ப்பிணிகள் !

உ.பி. அரசு காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கொரோனா - தொற்றுடையவர்களில் 5 பேர் கர்ப்பிணிகள் !
உ.பி. அரசு காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கொரோனா - தொற்றுடையவர்களில் 5 பேர் கர்ப்பிணிகள் !

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் அரசு காப்பகத்தில் உள்ள 57 சிறுமிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 சிறுமிகள் கருவுற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருக்கும் அரசு காப்பகத்தில் உள்ள 57 சிறுமிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா உறுதி செய்யப்பட்டவர்களில் 5 சிறுமிகள் கருவுற்றிருந்தனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும், அக்காப்பகத்தில் உள்ள 2 சிறுமிகள் கருவுற்றிருப்பதாகவும் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதும் பரிசோதனையில் தெரியவந்திருப்பதாக மாவட்ட நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து கான்பூர் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் பிரம்ம தேவ் ராம் கூறும்போது, ‘கொரோனா உறுதி செய்யப்பட்ட 5 கர்ப்பிணி சிறுமிகள் ஆக்ரா, ஃபெரோஸாபாத் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து குழந்தைகள் நல கமிட்டி பரிந்துரைக்கப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் அழைத்து வரப்பட்டனர். மற்ற 2 கர்ப்பிணி சிறுமிகளுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது. சிறுமிகள் 7 பேரும் இங்கு அழைத்து வரும்போதே கருவுற்றிருந்தனர்’ என்றார். மேலும், 5 சிறுமிகளில் 2 பேர் எல்எல்ஆர் மருத்துவமனையிலும், மற்ற 3 சிறுமிகள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசு காப்பகத்தில் சிறுமிகள் கருவுற்றிருப்பது குறித்து வெளியான செய்திகள் தொடர்பாக பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச அரசை சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com