மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த சுமார் 50 கல்லூரி மாணவ மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மகாராஷ்ட்ரா மாநிலம் RAIGARH பகுதியில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவ மாணவிகள் அங்குள்ள அருவிக்கு சென்றனர். அருவியில் தண்ணீர் இல்லாததால் அப்பகுதியில் இறங்கி அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில் திடீரென நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகமானதால் மாணவர்கள் அனைவரும் நீர்வீழ்ச்சியின் ஒருபுறமுள்ள கரையில் மாட்டிக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து சகமாணவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலை தொடர்ந்து அனைத்து மாணவ மாணவிகளும் கயிற்றின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். அருவியில் நீர்வரத்து அதிகரிப்பதை உணர்ந்த மாணவர்கள் பத்திரமாக கற்களின் மீது ஏறி நின்றுக்கொண்டதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தங்கள் வாழ்நாள் இருக்கும் வரை மறக்க முடியாது என்றும் மாணவர்கள் பிரமிப்புடன் தெரிவித்தனர்.

