\
கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு பணிக்கு வராத 54 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம்

கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு பணிக்கு வராத 54 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம்

கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு பணிக்கு வராத 54 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம்
Published on

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிக்கு வராத 54 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உலக நாடுகள் பல கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றன. பொதுமக்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஆனாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொது நலத்துடன் மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கடுமையான உழைப்பை கொடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிக்கு வராத 54 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணிக்கு வராத 54 ஒப்பந்த பணியாளர்களை பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இம்மருத்துவமனை கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்கும் சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com