மீன் பிடிக்கச் சென்ற மூதாட்டிக்கு ஜாக்பாட்- ரூ.3 லட்சத்திற்கு விலைபோன மீன்!

மீன் பிடிக்கச் சென்ற மூதாட்டிக்கு ஜாக்பாட்- ரூ.3 லட்சத்திற்கு விலைபோன மீன்!
மீன் பிடிக்கச் சென்ற மூதாட்டிக்கு ஜாக்பாட்-  ரூ.3 லட்சத்திற்கு விலைபோன மீன்!
ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 52 கிலோ எடையுள்ள மீன் ஒன்று ரூ.3 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது.
 
மேற்குவங்காளம் மாநிலத்திலுள்ள தெற்கு 24 பர்கனா மாவட்டத்தின் சுந்தரவன பகுதியில் வசிப்பவர் புஷ்பா கர். இவர் சாகர் தீவுப் பகுதியில் மீன் பிடிப்பதற்காக தினமும் செல்வது வழக்கம்.
 
சில தினங்களுக்கு முன் வழக்கம்போல் மீன் பிடிக்கச் சென்றபோது, அங்குள்ள ஒரு ஆற்றில் 52 கிலோ எடையுள்ள பெரிய மீன் ஒன்று கிடந்ததைப் பார்த்துள்ளார். போலா எனும் கடல் மீன் வகையைச் சேர்ந்த இந்த மீன், இறந்தநிலையில் கரை ஒதுங்கி, ஆற்றில் இழுத்து வரப்பட்டுள்ளது.
 
இறந்த மீன் என்பதால் அதனை உணவுக்கு பயன்படுத்த முடியாது. எனினும் மருத்துவ நோக்கங்களுக்காக இந்த மீன் நல்ல விலை போகும் என சக மீனவர்கள் அந்த பெண்ணுக்கு யோசனை வழங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு கிலோ மீன் 6,200 ரூபாய்க்கு விற்று, ரூ.3 லட்சத்திற்கு மேல் சம்பாதித்து உள்ளார்.
 
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுக்கு கூட புளபர் போன்ற உறுப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலர்ந்த புளபர் அல்லது ஃபிஷ்மா ஒரு கிலோ ரூ .80,000 வரை விலை போகுமாம்.
 
நீண்ட காலமாக, பொருளாதார நெருக்கடியால் தவித்துவந்த தனக்கு இந்த மீன் மூலம் இவ்வளவு வருமானம் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார் புஷ்பா கர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com